Its wholesome ❤
இன்று பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் ஒரு பாதி கிழிந்த காகிதத்தை கொடுத்து என்னை படிக்க சொன்னார்..அவருக்கு ஒரு 65 வயதுக்கு மேல் இருக்கும்..அழுக்கு சட்டையுடன் கட்டப்பையில் டிபன் பாக்சில் யாருக்கோ சாப்பாடு கொண்டு போகிறார் போல.. அந்த கடிதத்தில், அன்பு மாமாவுக்கு, நீங்க எப்படி இருக்கீங்க.. ஒழுங்கா சாப்டறீங்களா.. என்னைய பத்தி எப்பவாச்சும் நினச்சுபீங்களா.. எப்ப ஊருக்கு வாரீங்க.. வந்ததும் என்ன கல்யாணம் கட்டிகிடுங்க.. காத்திட்டு இருக்கேன் உங்க நெனப்புல.. அப்படின்னு எழுதி இருந்தது.. படித்து முடித்ததும் அவர் பேச ஆரம்பித்தார்..தம்பி 48 வருசத்துக்கு முந்தி நான் பட்டணத்துல வேலை செஞ்சிட்டு இருந்தப்போ எனக்கு அவ எழுதுன காதல் கடுதாசி..நான் னா அவருக்கு உசுரு தம்பி.. எனக்கும் அப்படிதான்...கல்யாணம் ஆகி 45 வருசம் ஆகுது தம்பி..இப்ப அவளுக்கு ஒரு ஆப்ரேஷன் ன்னு ஆஸ்பத்திரியில சேத்து இருக்கேன்..அவளுக்கு தான் சாப்பாடு கொண்டு போய்ட்டு இருக்கேன் தம்பி.. எப்ப்பவாச்சும் மனசு சரியில்லனா இந்த கடுதாசி-ய யார் கிட்டயாச்சும் கொடுத்து படிக்க சொன்னா அவ சொல்ற மாதிரியே இருக்கும் தம்பி என்று வெள்ளந்தியாய் பேசினார்.. அ...